வீட்டில் இருந்தே பிசியோதெரபி ஆலோசனை: மதுரை பிசியோதெரபிஸ்ட்கள் சாதனை..!

வீட்டிலிருந்தே பிசியோதெரபி ஆலோசனை பெரும் வகையில் புதிய செயலி ஒன்றை மதுரையை சேர்ந்த பிசியோதெரபிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய காலநிலையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் உள்ளிட்ட பல நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு குறைந்து நாற்காலியில் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்வது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உடல் இயக்க பாதிப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய பரிந்துரை செய்யக்கூடிய வகையில் ’என் பிசியோ’ என்ற புதிய செயலியை மதுரையை சேர்ந்த பிசியோதெரபிஸ்டுகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பிசியான சூழ்நிலையில் மருத்துவமனை செல்லவோ, அல்லது பிசியோதெரபி நிலையங்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையில் பலர் உள்ளனர். அவர்களுக்காக ஆன்லைன் ஆலோசனை தரும் வசதிகள் இந்த செயலியில் உள்ளது என என் பிசியோ என்ற செயலியை உருவாக்கிய பிசியோதெரபிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக பெண்கள் முதியோர் ஆகியவர்கள் பிசியோதெரபி குறித்து ஆலோசனை பெறுவதற்கு இந்த செயலி உதவும் என்றும் ஆன்லைன் மூலமாகவே ஆலோசனை பெற்று பயன்படும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் பிசியோதெரபி நிலையம் அல்லது மருத்துவமனைக்கு செல்வதற்கு காலவிரயம் மற்றும் பணவிரயத்தை தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து வகை மருத்துவம் மற்றும் பிசியோதெரபி குறித்து ஆலோசனைகளை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செய்வதை இந்த செயலியின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளனர் அருகில் உள்ள மருத்துவமனை, பிசியோதெரபிஸ் நிலையம், சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட பல குறிப்புகள் இந்த என் பிசியோ செயலியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மதுரையில் ஜூன் 4-ம் தேதி இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பொதுமக்கள் மத்தியில் இந்த செயலி தற்போது வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews