
Entertainment
வலிமை பட தயாரிப்பாளரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர் கொள்ளை..!!
இந்தியாவின் கொள்ளை செயலில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் தங்களது அறிவை பயன்படுத்தி நூதனமான முறையில் நவீனமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
இவையெல்லாம் தாண்டி தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
அதன்படி வலிமை உள்ளிட்ட பல சினிமா பட தயாரிப்பாளர் போனி கபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ரூபாய் 3.52 லட்சம் மோசடி செய்துள்ளார்.
போனி கபூர் வங்கி கணக்கிலிருந்து குருகிராமில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு ரூபாய் 3.52 லட்சம் சென்றுள்ளது. இதனால் போனிகபூர் அதிர்ச்சியடைந்துள்ளார் மேலும் இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார்.
முன்பெல்லாம் பிரபலங்களின் சமூக வலைதளங்களை ஹேக் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
