நேதாஜி மரணத்தின் மர்மம் விலகுவது எப்போது?

நேதாஜியின் மரணம் பற்றிய தகவல்கள் இன்று வரை மர்மமாகவே உள்ளது. எஞ்சியுள்ள டி.என்.ஏ சோதனையானது அவரது இறப்பிற்குப்பின் மக்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் என பலர் நம்புகின்றனர்.

1942 இல், அவர் ஜப்பானிய ராணுவ உதவியுடன் தென்கிழக்கு ஆசியாவில் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார், நேதாஜி 1943 ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவிற்காக ஒரு தற்காலிக அரசாங்கத்தை அந்தமான் மற்றும் நிக்கோபரில் ஜப்பானிய படைகள் உதவியுடன் நிறுவினார்.

1945-ல் நடந்த விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக அனைவரும் நம்புகின்ற வேலையிலும் அவர் அந்த விபத்தில் இறக்கவில்லை என்பதற்கு பல சாட்சியங்கள் இருப்பதாக பல அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

அவரது மரணத்தில் உள்ள மர்மம் காரணமாக, இந்த வழக்கு விசாரணையின் போது பல குழுக்களை அரசு அமைத்திருந்தது. மத்திய அரசால் நேதாஜி இறப்பு சம்மந்தமாக சரியான அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால் அவர் விமான விபத்தில் இறந்தார் என்பதே குழப்பமாக இருந்து வருகிறது.

அவர் நாட்டுக்காக செய்த தியாகங்கள் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. ஆங்கில அரசுக்கு எதிராக மிகப்பெரிய ஒரு படையையே திரட்டி போரிட்டவர் நேதாஜி. அப்படிப்பட்ட ஒரு வீரரின் மரணம் பற்றிய மர்மத்தில் பல அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே எண்ண வைக்கிறது. சுதந்திர இயக்கத்தில் அவரது மிகப்பெரிய பங்களிப்பால் அவரது பிறந்த நாள் நேதாஜி ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.