அதிகரிக்கும் திருட்டு; முதியவர்களை குறிவைத்து கைவரிசை காட்டும் மர்ம நபர்!!

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொள்ளை, திருட்டு சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் வேதனை அளிக்கும் தகவல் என்னவென்றால் படித்த இளைஞர்கள் பலரும் இந்த நூதன திருட்டில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்கள் படிப்பின் அருமை திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தி நூதனமான முறையில் திருடுகின்றனர். இந்த நிலையில் தலைநகர் சென்னையில் தினம்தோறும் திருட்டு, கொள்ளை சம்பவம் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் முதியவர்களை குறிவைத்து நூதன திருட்டு நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து கொள்ளையர்கள் நூதன திருட்டில் ஈடுபடுகின்றனர்.

குளக்கரை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வரதன் வீட்டில் நுழைந்த மர்ம நபர் 5 சவரன் தங்க செயினை பறித்து ஓடிச் சென்றனர். அதே குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு மூதாட்டி அனுராதாவின் வீட்டில் ரூபாய் 15,000 பணத்தை திருடிச் சென்றனர் மர்ம நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுராதா 73 வயது உள்ள மதிக்கத்தக்க மூதாட்டியாவர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment