தொடர் விபத்து!! மாயமான மீனவரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி கடலில் மாயமானவரின் உடலானது மீட்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இதுவரையில் 27 மீனவர்கள் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் துறைமுகத்தின் கட்டுமான பணிகள் சரியில்லாத காரணத்தினால் விபத்துகள் அதிகமாக நேரிடுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் தன்னுடைய படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது.

பின்னர் மீண்டும் திரும்பும் போது துறைமுகத்தின் நுழைவாயில் சிக்கி மாயனார். இதற்கிடையில் மீனவரின் உடலை மீட்கும் பணியானது தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

தற்போது மாயமானவரின் உடலை அவரது உறவினர்கள் மீட்டுள்ளனர். அதோடு மீனவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment