Connect with us

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்ம மரணம்..

death 1

செய்திகள்

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்ம மரணம்..

மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டம் மைஜால் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைஜால் அம்மிகால் நகரில் மாணிக் எல்லப்பா, போபட்டி எல்லப்பா என்ற 2 சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் சகோதரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தங்கள் வீடுகளில் சடலமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனிடையே முதற்கட்ட விசாரணையில் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. ஆனால் 9 பேரும் அவர்கள் தற்கொலை செய்தார்களா? அல்லது அவர்களின் உயிரிழப்புக்கு ஏதேனும் சதிவேலை உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சகோதரர்கள் இருவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன என்பதும் குறித்தும் விசாரனை நடைப்பெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top