32 குழந்தைகள் மர்ம மரணம்: 3வது அலை தோன்றிவிட்டதா?

2c745923117d087eb5dfdae81ac8ddb7-2-2

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்றும் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்றாவது அலை இந்தியாவில் தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

ஏற்கனவே அமெரிக்காவில் தற்போது மூன்றாவது அலை தாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் திடீரென 32 குழந்தைகள் உள்பட 40 பேர்கள் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதால் மூன்றாவது அலை தோன்றி விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத் துறை உயிரிழந்தவர்களின் மருத்துவ பரிசோதனை ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் இரண்டாவது அலை தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் திடீரென 32 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment