Connect with us

கோபுர கலசங்களை ஆட்டயபோட்ட மர்ம ஆசாமிகள்… அதிர்ச்சியில் கோவில் நிர்வாகம்

temple

செய்திகள்

கோபுர கலசங்களை ஆட்டயபோட்ட மர்ம ஆசாமிகள்… அதிர்ச்சியில் கோவில் நிர்வாகம்

திட்டக்குடி அருகே கோவில் உண்டியல் மற்றும் கலசங்கள் திருடிய இரண்டு பேர் கைது அவர்களிடமிருந்து மூன்று கலசங்கள், பூஜை பொருட்கள், உண்டியல் பணம் பத்தாயிரம் பறிமுதல் செய்தனர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது இந்த கோயிலில் இரவு மர்மநபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி உள்ளனர் மேலும் ஏரி கரையில் உள்ள செல்லியம்மன் கோயிலில் மூன்று கோபுர கலசங்கள் மற்றும் கோயிலில் இருந்த பித்தளை மணி, பூஜை பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து இராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வந்தனர் இந்த நிலையில் ஆவட்டி ரோட்டில் சந்தேகம்படியாக இரண்டு பேர் நின்று கொண்டிருந்தபோது அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னாக முரணாக பதில் அளிக்க அதன்பினர் அவர்களை இராமநத்தம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் விசாரணையில் திட்டக்குடி அருகே A.அகரம் கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் முத்து (வயது 39) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாவரம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் மகன் சரண் (வயது 26)

இவர்கள் இரண்டு பேரும் கோவில் கலசங்கள் மற்றும் உண்டியல், பூஜை பொருள்கள் மணிகளை திருடியது தெரிய வந்தது பின்னர் இவர்களிடம் இருந்து மூன்று கலசங்கள், பூஜை பொருட்கள், மணி மற்றும் உண்டியல் பணம் பத்தாயிரம் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் இராமநத்தம் போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top