போடுறா வெடியா!! தளபதி 67 படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்; என்ன கேரக்டர் தெரியுமா?

தளபதி 67 படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான ‘வாரிசு’ திரைப்படம் வெளியானது. இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். தளபதி 67 படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதில் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.

செவன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சற்று முன் இயக்குநர் மிஷ்கின் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய், சஞ்சய் தத் ஆகியோருக்கு நிகரான முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image

லோகேஷின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்த பிலோமின் ராஜ் இப்படத்திற்கும் படத்தொகுப்பாளராக தொடர்கிறார். அதேபோல கைதி, விக்ரம் படங்களுக்கு ஆக்‌ஷன் ஸ்டண்ட் மாஸ்ராக இருந்த அன்பறிவ் இப்படத்திற்கு ஆக்‌ஷன் ஸ்டண்ட் மாஸ்ராக இருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாராக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews