மையோசிடிஸ் நோய் குறித்த கேள்வி.. கண்ணீர் விட்டு அழுத சமந்தா!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தற்போது வெளியாகும் யசோதா படத்தின் எதிர்பார்ப்பானது எகிற செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக அவருடைய ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடை வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த சூழலில் நேர்க்காணல் நிகழ்ச்சி ஒன்றில் தனது உடல்நிலை குறித்துப் பேசிய சமந்தா, தான் மிகவும் வலிமையற்றதாக இருந்ததாகவும், அதோடு பலரும் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒரு நாள்போலவே மற்றொரு நாள் இருக்காது என்று தெரிவித்திருந்தேன் என்றும் தற்போது அதனை நினைவுகூர்ந்ததாக தெரிவித்தார்.

மேலும், எனது நிலைமை உயிருக்கு ஆபத்தானது என்று விளக்கும் பல கட்டுரைகளை நான் பார்த்ததாகவும், அந்த தலைப்புச் செய்திகள் மிகவும் அவசியமானவை என்று தோன்றவில்லை என கூறி கண்கலங்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.