சொகுசு வீடு, தோட்டம் வாங்க திட்டம்; இரட்டை கொலை வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்

ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதாவை கொடூரமான கொலை செய்த வழக்கில் கிருஷ்ணா ம  ற்றும் ரவி ராய் ஆகியோர் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதாவை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துவிட்டு கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ள பண்ணை வீட்டில் புதைத்த கிருஷ்ணா மற்றும் ரவி ராய் என்ற வட நாட்டைச் சேர்ந்த 2 பேரை மயிலாப்பூர் போலீசார் போலீஸ் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருடப்பட்ட தங்க வைர நகைகளை நேபாளத்திற்கு கொண்டு சென்று கிருஷ்ணாவும், ரவி ராயும் சம பாதியாக பிரித்துக் கொண்டு அடகு கடையில் வைத்து, கிடைக்கும் பணத்தை வைத்து கொண்டு பங்களா வீடு மற்றும் தோட்டம் வாங்கி செட்டில் ஆக திட்டமிட்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தொடர்ந்து கொலை செய்யப்பட்ட மயிலாப்பூர் வீடு மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக அழைத்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment