மியான்மர் வேலைவாய்ப்பு மோசடி – 2 பேர் அதிரடி கைது..!!

மியான்மர் நாட்டில் இந்தியர்களிடம் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடியில் 2 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஸ்டிரா மாநிலம் டோங்கிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இணையத்தளம் மூலம் கிடைத்த தகவலில் அடிப்படையில் வெளிநாடுகளில் வேலைக்கு தேடியுள்ளதாக கூறப்படுகிறது.

கோர விபத்து!! அரசுப் பேருந்து – பள்ளி சுற்றுலா பேருந்து மோதியதில் 9 பேர் பலி!!

அப்போது இணையத்தளத்தில் அறிமுகமான ஒருவர் தாய்லாந்து நாட்டில் 1000 டாலர் சம்பளத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி முமர்காதர் என்பவரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உமர்காதர் அவர்களிடம் 45 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு தாய்லாந்து நாட்டிற்கு சென்று அவரை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார். அப்போது தாய்லாந்தில் இருந்து மியான்மர் நாட்டிற்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை..!!

இந்த சூழலில் இளைஞர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை முடிக்க வேண்டும் அல்லது ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இதனிடையே குடும்பத்தினர் மூலம் ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டு தாயகம் திரும்பியதாக கூறப்படுகிறது. அதே சமயம் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இடைத்தரகர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதன் படி, தற்போது 2 இடைத்தரகர்களை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment