“என் மனைவி ஒரு பெண்ணே இல்லை,அவள் ஒரு..?”விவாகரத்து கோரிய கணவர்- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் !!
ஒரு ஆணை பெண் என ஏமாற்றி தனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக கூறி வாலிபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்துகொண்ட சில நாளில் அவரது மனைவி மாதவிடாய் என்று கூறி இல்லர வாழ்கைக்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு தனது தந்தை ஊருக்கு சென்றுவிட்டார். ஆறு நாட்கள் கழித்து மீண்டும் கணவன் வீட்டுக்கு திரும்பினார்.
பிறகு இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட தன் மனைவிக்கு ஆண் தன்மை இருப்பது போன்று சந்தேகப்பட்ட அவர் தன்னுடைய மனைவியை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். அப்போது மருத்துவமனையில் அவர் மனைவிக்கு குறைபாடு இருப்பது தெரிய வந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் ஹார்மோன் பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள் கூற்றின் படி அவருக்கு பெண் பாலின உறுப்பு இருந்தாலும் குழந்தை பிறப்பதற்கு சாத்தியமில்லை என கூறினார். இதனையடுத்து தன் மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மனைவி கணவனுக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். பதிலாக அவரும் தன்னை பெண்வீட்டார் ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண்ணை கோர்ட் மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. ஆனால் அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வில்லை. மாறாக மத்தியபிரதேச உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மத்தியபிரதேச உயர்நீதி மன்றம் பெண் உறுப்பு சரியாக இருப்பதாகவும் இதனை மோசடி என கூற முடியாது என உத்தரவிட்டது.
இதனிடையே அந்த பெண்ணின் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில் அவள் ஒரு ஆண் என்னை ஏமாற்றி விட்டாள் என குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து டாக்டர்களின் அறிக்கையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதனால் அப்பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெண்களின் உடலைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் தன் மனைவி பெண்ணே இல்லை என வழக்கு தொடர்ந்த அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
