மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் திருநாளில் என் பொங்கல் வாழ்த்துக்கள்!: ஆளுநர் ஆர்.என்.ரவி

நாளைய தினம் தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளிநாடு, வெளி ஊர்களில் வசிக்கும் தமிழர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். பலரும் தமிழ்நாட்டு மக்களுக்கு  பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் சட்டப்பேரவையில் வணக்கம் என்று கூறிவிட்டு ஒரே தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தற்போது மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் திருநாளில் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி கூறினார்.

வாழ்வும் சக்தியும் வழங்கும் சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் அறுவடை திருவிழா பொங்கல் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ரவி கூறினார். தைத்திங்கள் தொடங்கும் நாளில் இறை ஆசி பெற அனைவரும் பிரார்த்தனைகள் செய்யும் நாள் பொங்கல் என்றும் அவர் கூறினார்.

பொங்கல் திருவிழா அனைவருக்கும் அளவில்லா வளத்தையும் உடல் நலத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கப்படும் என்று ஆளுநர் ஆர். என்.ரவி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment