தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக வாரிசு அரசியல் என்று நிலைமை காணப்படுகிறது. மேலும் அரசியலில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளும் தொடர்ந்து நம் தமிழகத்தில் அரசியலுக்குள் நுழைகிறதை நாம் பார்க்கிறோம்.
https://www.facebook.com/tamilminutes/
இவை அனைத்து கட்சிகளிலும் காணப்படுகிறது. ஆனால் தற்போது அரசியலில் மிக முக்கிய தலைவராக உள்ள ஒருவர் தன் மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அதன்படி இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அதன்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என் மகன் துரை வைகோ அரசியல் வருவதை நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை வரும் 20ஆம் தேதி கூடும் கட்சிக் குழு முடிவு செய்யும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். என் 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் லட்சக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்துள்ளேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.
மேலும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு அரசியலில் என் வாழ்க்கையை அழித்து இருக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதனால் தந்தையாக என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.