ரூ.500 தான் என்னுடைய முதல் சம்பளம்: மனம் திறந்து பேசிய சமந்தா !!

சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவுடன் சமூகவலைதளங்கள் பல்வேறு சர்சைகள் எழுந்து வந்தன.

ஆனால் இதனை கண்டுகொள்ளாத சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின் ஒ சொல்றியா மாமா என்ற பாடல் சோசியல் மீடியாவில் தாறுமாறாக பட்டைய கிளப்பியது.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா சிறிது நேரம் ரசிகர்களுடன் உரையாடு வழக்கம்.

அப்போது தன்னுடைய முதல் சம்பளம் ரூ.500 என்றும் பள்ளியில் படிக்கும் போதே பார்ட் டைம் வேலையாக ஹோட்டலில் நடக்கும் விழாக்களை தொகுத்து வழங்கியதாக கூறினார்.

இதனிடையே நான் பார்த்த முதல் படம் ஜுராசிக் பார்க் என கூறியுள்ளார். மேலும், அவர் நடித்த காத்து வாக்குல படத்தை காண ஆர்வமாக இருப்பதாகவும் இப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதாக அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment