வெற்றிவாகை சூட என் வாழ்த்துக்கள்! முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு-கமலஹாசன்;

நம் தமிழகத்தில் இதுவரை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளது. இதில் பெரும்பாலும் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பல வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா? எப்போது நடக்கும்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இதன் மத்தியில் மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இதனை மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார் அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  கட்சி சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் நாற்பத்தி ஏழு பேரின் பட்டியலை மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தீர்க்கப்படாத பிரச்சினைகள் உடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன என்று கமலஹாசன் கூறியுள்ளார். நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மக்கள் நீதி மையத்தில் திருப்புமுனையாக அமையும் என்றும் கமலஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனென்றால் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment