என் குழந்தையின் வருங்கால அம்மா நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் பதிவு!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், இவர் தமிழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் நடிகை நயன்தாரா. அதிக அளவில் வெற்றிப் படங்களைக் கொடுத்து ஹீரோ அளவுக்கு பேசப்பட்டு வரும் நடிகை இவரே ஆவார்.

விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடித்துவருகிறார். இது திருமணத்திற்கு முன்னர் நயன்தாரா நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்று சொல்லிவந்த நிலையில், நயன்தாரா ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

8b066c7d1af18ea263a46e874832f3aa

மேலும் அதுபோக தெலுங்கில் 3 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. அந்தவகையில் பார்க்கையில் கையில் உள்ள படங்களை முடித்துக் கொடுக்க ஆண்டுகள் ஆவதால் நயன்- விக்னேஷ் திருமணம் தள்ளிப் போகிக் கொண்டே உள்ளது.

இந்த நிலையில் நேற்று அன்னையர் தினத்தை உலகமே கொண்டாடியநிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் நயன் குழந்தையினைக் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “எனது வருங்கால குழந்தைக்கு அம்மாவாக இருக்கப்போகும் நயன்தாராவுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, எப்படியோ சீக்கிரம் திருமணம் குறித்து குட் நியூஸ் சொல்லுங்க என்று கூறி வருகின்றனர்.


Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment