Connect with us

தேர்தல் தோல்விக்கு எனது அண்ணனும், பழனிசாமியும் தான் காரணம்! அதிமுகவுக்கு சசிகலா தேவை: ராஜா

சசிகலா ஈபிஎஸ் ஓபிஎஸ்

தமிழகம்

தேர்தல் தோல்விக்கு எனது அண்ணனும், பழனிசாமியும் தான் காரணம்! அதிமுகவுக்கு சசிகலா தேவை: ராஜா

தேர்தல் தோல்விக்கு எனது அண்ணனும், பழனிசாமியும் தான் காரணம்! அதிமுகவுக்கு சசிகலா தேவை: ராஜா

நேற்றைய தினம் அதிமுக கட்சியில் பெரும் பரபரப்பு நிகழ்ந்தது. ஏனென்றால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா திடீரென்று தூத்துக்குடி திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்தார்.

கிட்டத்தட்ட இருபது நிமிட சந்திப்பிற்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அதிமுக கட்சியில் இருந்து தற்போது ராஜா நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவுக்கு சசிகலா தலைமை தேவை என்று கூறியுள்ளார்.

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தான் காரணம் என்றும் ராஜா கூறியுள்ளார். தனது விருப்பப்படியே சசிகலாவை சந்தித்ததாகவும் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய நிலை நீடித்தால் அதிமுக ஒன்றுமில்லாமல் போய்விடும் என்றும்  ராஜா கூறினார். அதிமுக கட்சியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது என்று பன்னீர் செல்வத்தின் சகோதரர்  ராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

என்னை பொருத்தவரை அதிமுக பொதுசெயலாளர் சசிகலாதான் என்று ராஜா கூறினார். அதிமுக தலைமை தாங்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top