
தமிழகம்
மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதி திட்டம்-3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்!!
கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா அவர்கள் முதல்வராக இருக்கும்போது கொண்டுவரப்பட்ட ஒரு பிரதானமான திட்டம் தான் தாலிக்கு தங்கம் திட்டம். ஆனால் இந்த திட்டம் தற்போதைய திமுக ஆட்சியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பதிலாக திராவிட முன்னேற்றக் கழகம் மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதி திட்டம் ஒன்றினை கொண்டு வந்துள்ளது. இதனால் உயர் கல்வி படிக்கும் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெரும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்று கூறினது. இதுபோன்ற பல விதிமுறைகளை கூறியுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி திட்டத்தில் பயன்பெற மாணவிகள் விண்ணப்பிக்க நேற்றைய தினம் நான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்று பல இடங்களில் விண்ணப்பித்த மாணவிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்காக தற்போது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதன்படி மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதி திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெற 3.5 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவகாசம் முடிந்த நிலையில் மொத்தம் 3 லட்சத்து 58,34 மாணவிகள் விண்ணப்பத்து உள்ளனர் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்து கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
