தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த கிராமத்து ஸ்டைல் மட்டன் உப்பு கறி செய்து பார்க்க…

தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ரெசிபி தான் மட்டன் உப்பு கறி . நம்ம வீட்டுல செய்து பார்க்கலாமா..

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்

சின்ன வெங்காயம் – 250 கிலோ

தக்காளி – 1

பூண்டு – 20 பற்கள்

இஞ்சி – 100 கிராம்

வரமிளகாய் – 10

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கு ஏற்ப

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டிக் கொள்ளவும்.

மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சோம்பு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின் மட்டன் துண்டுகளை சேர்த்து,தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி கிளறி விடவும்.

பிரெட்டில் ஜாமூக்கு பதிலாக சத்தான பீனட் பட்டர்… வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

மட்டனின் நிறம் மாறவும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கவும்.

பிறகு குக்கரை திறந்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.