தேவர் தங்கக்கவசம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு வழங்க மறுப்பு !!

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார்.

இந்நிலையில் கவசத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வங்கியில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருடந்தோறும் தேவர் குருபூஜை முன்னிட்டு 13 கிலோ தங்க கவசத்தை அனுவித்து மீண்டும் வாக்கரில் வைப்பது வழக்கமாக இருந்துள்ளது.

பெரும் சோகம்! உலகின் அழுக்கு மனிதர் மரணம்!!

இதற்கிடையில் அதிமுகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக தங்க கவசத்தை பெறுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடும் மோதல்கள் நிலவி வருகிறது.

இதன் காரணமாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

அக். 29ல் பருவமழை தொடங்கும் – வானிலை மையம் தகவல்!

அப்போது பேசிய நீதிபதி தேவர் தங்க கவசத்தினை ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், தேவர் தங்க கவசத்தை ராமநாதபுரம் DRO வசம் ஒப்படைத்து, தங்க கவசத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment