’கேள்வி கேட்டால் மத சாயம் பூசாதீர்’ பாஜகவிற்கு முத்தரசன் கண்டனம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் தமிழக அரசு விதிகள் செல்லும் என்ற தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த அடுத்த வெற்றி – முத்தரசன்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசு கொண்டு வந்த விதிகள் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, சமூக நீதிக்கு கிடைத்த அடுத்த வெற்றியாக கருதுகிறோம்

மோடி தலைமையிலான ஆட்சிக்கு பிறகு சமூக நீதி மறுக்கப்பட்டு, மத கலவரங்கள், சாதிய மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடக்கிறது.

சனாதன சக்திகள் இதுபோன்ற மாற்றங்கள் நடந்துவிட கூடாது என்று இருக்கிறார்கள், மாற்றத்தை ஏற்க மறுக்கும் சனாதன சக்திகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வந்துள்ளது.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு சாவர்க்கர் குறித்த புரிதல் என்று ஒன்றிய இணை அமைச்சர் தமிழ்நாட்டு சுற்றுப்பயணம் வந்தபோது கூறியுள்ளார். நாட்டின் விடுதலை போராட்ட கதைகளை மோடி உள்ளிட்டவர்கள் படிக்க வேண்டும்

காரைக்காலில்  கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு மத சாயம் பூசி விமர்சித்த பாஜக ஹெஜ்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு முத்தரசன் கண்டனம். செய்தியாளர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உள்ளது.

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை முழுமையாக ஒழித்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக உணவு பொருட்கள் உள்ளிட்ட ஏழைகள் பயன்படுத்துகிற அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, வருகின்ற 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யுனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம்.

நாகை மாவட்டம் எட்டுக்குடி கிராமத்தில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment