Connect with us

பாஜக ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக உணர்வு…..! சுமார் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிஜேபி வெற்றி பெறும்!!

பாஜக

செய்திகள்

பாஜக ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக உணர்வு…..! சுமார் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிஜேபி வெற்றி பெறும்!!

பாஜக ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக உணர்வு…..! சுமார் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிஜேபி வெற்றி பெறும்!!

இந்தியாவிலேயே சர்ச்சைக்குரிய மாநிலமாக காணப்படுவது உத்தரபிரதேச மாநிலம் தான். இந்த உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 408 தொகுதிகள் உள்ளன. இந்த 408 தொகுதிகளில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அதிலும் குறிப்பாக இன்றைய தினம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தர பிரதேசத்தில் நடைபெறும் இரண்டாம்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் பகல் 3 மணி நிலவரப்படி  51.93 சதவீதம் வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே ஆளும் கட்சி தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு அதிக அளவு நட்சத்திர பேச்சாளர்களை உத்தரபிரதேச மாநிலத்தில் களமிறக்கி உள்ளது.

modi 3

குறிப்பாக இன்று பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் பாதுகாப்புடன் இருப்பதாக இஸ்லாமிய பெண்கள் உணர்கின்றனர் என்று கூறியுள்ளார்.

201904111155289154 Congress Infected By Green Virus Yogi Adityanath s Latest SECVPF

அதேபோல் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக வெற்றி பற்றி கூறியுள்ளார். உ.பி தேர்தலில் பாஜக சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top