ட்விட்டரை வாங்கிய மஸ்க்: முதல் நாளில் இந்தியர் பணி நீக்கம்!!

ட்விட்டரை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உட்பட 4 முக்கிய உயர்மட்ட அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார்.

உலகின் நம்பர் ஒன் பணக்கார எலான் மஸ்க் பல்வேறு இழுப்பறிக்கு பிறகு டுவிட்டரை அதிகாரப்பூர்வமாக தன்வசப்படுத்தினார்.

அதிர்ச்சி! ஃபயர் ஹேர் கட்டிங்கால் நேர்ந்த வீபரீதம்..!!

இந்நிலையில் தொடர்ந்து டுவிட்டரில் பெயர் மாற்றம் செய்வது, டுவிட்டர் அலுவலகத்திற்குள் கைகழுவும் சிங்குடன் நுழைவது போன்ற அட்டக்காசம் செய்துகொண்டிருந்தார்.

இதற்கிடையில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரை எலான் மஸ்க் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி!!

மேலும், அடுத்தப்படியாக அந்த பதவிக்கு யார் இருப்பது? என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment