Connect with us

இசைஞானி இளையராஜா பிறந்த நாள்: பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து !!

ANBUMANIRAMADOSS

தமிழகம்

இசைஞானி இளையராஜா பிறந்த நாள்: பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து !!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாமக தலைவர் அன்புமணி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 80-வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் இசைச்சக்கரவர்த்தியாக இருக்கும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் 100-வது பிறந்த நாளை காண விரும்புவதாக கூறினார்.

இதனிடையே இளையராஜாவின் தீவிர ரசிகர்களில் ஒருவராக நானும் இருப்பது பெருமைக்குரியதாக இருப்பதாக தெரிவித்தார். அதோடு தன்னுடைய மகிழ்ச்சி மற்றும் துன்பத்தில் இளையராஜா தன்னுடன் பங்கேற்பார் என கூறினார். அனைத்து மக்களாலும் நேசிக்கும் விதமாக இருப்பவர் இசைஞானி இளையராஜா என தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது இசைச்சேவை தொடர வேண்டும் என்றும் இந்தியாவில் 2-வது பத்ம பூஷன் விருதை பெற்றுள்ள நிலையில் அடுத்தாக நாட்டின் மிக உயரிய பாரதரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே போன்ற விருதுகளை பெற வேண்டும் என்றும் இந்த இனிமையான தருனம் விரைவில் நடைப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top