Connect with us

பிரம்மாண்டமாக நடைபெறம் “திருச்சிற்றம்பலம்” படத்தின் இசை வெளியீட்டு விழா!! எப்போது தெரியுமா?

thiruchitrambalamdhanush11655281081

பொழுதுபோக்கு

பிரம்மாண்டமாக நடைபெறம் “திருச்சிற்றம்பலம்” படத்தின் இசை வெளியீட்டு விழா!! எப்போது தெரியுமா?

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இதை தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் திருச்சிற்றம்பலம்.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான தாய்க்கிழவி பாடல் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த சூழலில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடத்த வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், அண்மையில் வெளியான தாய்க்கிழவி பாடலானது நடிகர் தனுஷ் பாடலை எழுதி பாடியும் அனிருத் இசையமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top