சும்மா போட்ட தாளத்தையே சூப்பர் ஹிட் பாடலாக மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா.. குத்துப்பாட்டுன்னா இதான்..

தமிழ் சினிமாவில் கானாவுக்கு எப்படி தேனிசைத் தென்றல் தேவா புகழ்பெற்றவரோ அவரைப் போலவே அவரது வாரிசான ஸ்ரீ காந்த் தேவாவும் குத்துப்பாட்டில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிமுகமாவதற்கு முன்னதாக மரணக் குத்து பாடல்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி ரசிகர்களை VIBE Mode ல் வைத்திருந்தார்.

எந்த அளவிற்கு குத்துப் பாடல்களுக்கு இசையமைத்தாரோ அதே அளவிற்கு மெலடி பாடல்களையும் கொடுத்துள்ளார் ஸ்ரீ காந்த் தேவா. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருதுவரை வென்றுள்ளார்.

மேலும் பல பின்னிப் பாடல்களையும் பாடியுள்ளார். தனது தந்தையைப் போலவே சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வரும் ஸ்ரீ காந்த் தேவா ஆர்.பாண்டியராஜன் இயக்கிய டபுள்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த குத்து படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் அப்போது டிவியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி ஹிட் அடித்தது. குறிப்பாக சாணக்கியா மெலடி பாடலும், போட்டுத் தாக்கு குத்துப் பாடலும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து இவர் இசையமைத்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நீயே நீயே பாடல் அன்னையர்களைப் போற்றும் பாடலாக லேட்டஸ்ட் பாடலாக அனைவரின் பிளே லிஸ்ட்டிலும் உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு குத்துப் பாட்டு தான் வச்சுக்க.. வச்சுக்கவா இடுப்புல பாடல்.

கோபி, சுதாகர் வாழ்க்கையை மாற்றிய இரண்டு நபர்கள்..இணைய நாயகர்களின் இன்ஸ்பைரிங் ஸ்டோரி

இப்படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜா, ஸ்ரீ காந்த் தேவாவிடம் 5 பாடல்கள் கேட்டுள்ளார். அதில் முதல் பாடலுக்கு டியூன் போட்டபின் ஆனந்தத்தில் தற்செயலாக கைக்கு வந்ததை கீபோர்டில் இசைத்துள்ளார் ஸ்ரீ காந்த் தேவா.

அப்போது ராஜா குறுக்கிட்டு இன்னும் 3 பாடல்களுக்கு டியூன் போட்டால் போதும் என்றிருக்கிறார். புரியா ஸ்ரீ காந்த் தேவா இன்னும் 4 பாடல்கள் உள்ளதே என்று கூற, அதான் இப்போது டியூன் ஒன்று போட்டீர்களே அதுவே அடுத்த பாட்டுக்கு வைத்துக் கொள்வோம் என்று கூறியிருக்கிறார். எனவே இசையமைப்பாளருக்கே தெரியாமல் அவர் தற்செயலாக கம்போஸிங் செய்த டியூனுக்கு வரிகள் போட்டு வச்சுக்க.. வச்சுக்கவா இடுப்புல.. பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படித்தான் இந்தப் பாடல் பிறந்தது. மேலும் ஸ்ரீ காந்த் தேவா விஜய்க்கு சிவகாசி, அஜீத்துக்கு ஆழ்வார், நெஞ்சிருக்கும் வரை, ஏய், திருநாள் என பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். திருநாள் படத்தில் இடம்பெற்ற பழைய சோறு பச்ச மிளகா… பாடல் அற்புதமான மெலடி இசையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ஒரு அனிருத், ஒரு ஹாரிஸ் ஜெயராஜ், ஒரு வித்யாசாகர் ஆகிய மூவரும் கலந்த கலவையான இசையமைப்பாளராக ஸ்ரீ காந்த் தேவா விளங்குகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...