நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்தார் என்பதும் அதன் பிறகு அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.
தன்னை பதவியிலிருந்து நீக்கிய பாஜகவின் தலைவர் அண்ணாமலை மீது அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் இருப்பினும் தன்னுடைய தலைவர் மோடி தான் என்றும் அவர் கூறிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஊடகங்களில் அவர் பேட்டி அளித்தபோது அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் பிரிவின் மாநில தலைவராக பிரபல இசையமைப்பாளர் தினா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலச் இசையமைப்பாளர் தினா அவர்களும் மாநில துணை தலைவர் ஆனந்த் மெய்யாச்சாமி அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.