மன்மதராசா ரேஞ்சுக்கு பாட்டு கேட்ட சத்யராஜ்.. அடிதடி பாட்டு கொடுத்த தேவா..

தனது லொள்ளு வசனங்களாலும், தனி ஸ்டைலாலும் வில்லனாக இருந்து, கடலோரக் கவிதைகள் படம் மூலமாக மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்தான் சத்யராஜ். அமைதிப்படை, வில்லாதி வில்லன் என நடிப்பில் தனித்துவம் காட்டி அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடக் கூடிய நடிகராகத் திகழ்கிறார் சத்யராஜ். நாயகனாக தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ் பெற்ற சத்யராஜ் 2010-க்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இளம் வயது ஹீரோ, ஹீரோயின்களுக்கு அப்பாவாகவும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் கதையின் நாயகனாகவும் குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், கடைக்குட்டி சிங்கம், ராஜாராணி, நண்பன், வீட்ல விஷேசம், லவ்டுடே,கனா போன்ற ஹிட் படங்களில் நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் சத்யராஜ்.

இசைஞானி இளையராஜாவின் இசையிலும், வண்டிச்சோலை சின்ராசு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே‘ பாடலும் சத்யராஜை ரசிகர்களிடம் வெகுவாகக் கொண்டு சேர்த்தது. மேலும் தேவாவின் இசையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இத்தனை ராமனையும் எங்க புடிச்சீங்க..? ஒரே பாட்டில் ஒட்டுமொத்த ராமன் புகழை அடக்கிய கண்ணதாசன்.. அடேங்கப்பா பெரிய வித்தைக்காரரா இருப்பாரு போலயே..!

அதேபோல் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ள சத்யராஜ், மணிவண்ணனுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக தனக்கே உரித்தான பாணியில் காமெடியாக பேசும் சத்யராஜ் குறித்து இசையமைப்பாளர் தேவா சுவாரஸ்யமாக நிகழ்வை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சத்யராஜ் குறித்து பேசிய, தேவா, “ சார் நீங்கள் என்னை நினைத்துக்கொண்டு பாட்டு போடாதீங்க சார். அஜித் குமாரை நினைத்துக்கொண்டு பாட்டு போடுங்க அப்படிதான் சொல்வார். அதேபோல் மன்மதராசா பாடல் வந்தபோது தேவா சார் இதே மாதிரி எனக்கு ஒரு பாட்டு போடுங்கனு கேட்டுக்கிட்டார். அவரை நான் பார்த்தேன். அதற்கு அவர் ஏன் அப்படி பாக்குறீங்க அதே மாதிரி ஆட மாட்டேனு பாக்குறீங்களா என்று கேட்டார். அதன்பிறகு தான் சத்யராஜ் நடிப்பில் வெளியான அடிதடி படத்தில் உம்மா உம்மமம்மா பாடல் போட்டேன் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

இப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்தாலும் ரதியுடன் குத்தாட்டம் போட்டு அசத்தியிருப்பார் சத்யராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.