கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா என்ற கிராமத்தில் பாலியல் தொழில் ஈடுபடும் நபர்களை துண்டு துண்டாக வெட்டி, கொலைசெய்யும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைப்பெற்றது. குறிப்பாக கடந்த ஜூன் 8-ம் தேதி மாண்டியாவின் வெவ்வேறு பகுதிகளில் உடல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இரு பெண்கள் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதே சமயம் மே மாதம் மாண்டியாவில் ஒரு பெண் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 3 பெண்களையும் ஒரே நபர் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. இதனால் 9 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொலையாலியை வலைவீசி தேடி வந்தனர்.
இதனையடுத்து போலீசார் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அதில் ஜூன், மே மாதங்களில் கொலைசெய்யப்பட்ட இடத்தில் இருந்த செல்போன் சிக்னல் ஒரே நபர் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்னர் செல்போன் நம்பரை வைத்து பெங்களூவை சேர்ந்த ஆயத்தப்பா என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
பல பெண்களிடம் நெருங்கி பழகும் ஆயத்தப்பாவுக்கு பாலியலில் ஈடுபடும் பெண்களிடமும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சந்திர கலா என்பரிடம் நெருங்கி பழகிய சூழலில் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட செய்யும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு ஆயத்தப்பாவும் சம்மதித்தாக கூறப்படுகிறது.
அதன் படி, 3 கொலைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கொலை செய்ததில் இருந்து தப்பிக்க சந்திர கலாவை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்குள் போலீசார் கண்டுப்பிடித்தால் அடுத்தடுத்து கொலைகள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது.