ஜம்மு-வில் டிஜிபி கொடூர கொலை: குற்றவாளி தலைமறைவு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் சிறைத்துறை டி.ஜி.பி அதிகாரியாக பணியாற்றி வருபவர் 57 வயதான ஹேமந்த் குமார் லோஹியா. இவர் நேற்றைய தினத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரும் ஏமாற்றம்…. தங்கம் விலை கிடுகிடு உயர்வு: எவ்வளவு தெரியுமா?

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் ஏறக்குறைய ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்த நபருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

இவரை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருவதாகவும், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். அதோடு குற்றம்சாட்டப்பட்டவர் பற்றி பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனார்.

ஆயுத பூஜை எதிரொலி: பூக்கள் விலை கிடுகிடு அதிகரிப்பு..!!

மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் 3 நாட்கள் பயணமாக ஜம்மு வந்த நிலையில் இத்தகைய கொடூர சம்பவம் அறங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment