அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தினர் படுகொலை: ஒருவர் கைது.!!

கலிபோர்னியாவில் அமெரிக்கவாழ் இந்திய குடும்பத்தினர் கடத்தி கொலைசெய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவழியை சேர்ந்த ஜஸ்தீப் சிங் கடந்த திட்கள் கிழமையில் தனது மனைவி, 8 மாத குழந்தை மற்றும் அவரது உறவினர் அமந்தீப் சிங் ஆகியோர் காரில் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அவர்களை கத்தி முனையில் கடத்தி சென்றனர்.

கவனமா இருங்க!! இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

இதனையடுத்து 4 பேரும் கடந்த புதன்கிழமையில் மெர்சிட் கவுண்டியில் இருக்கும் பழத்தோட்டத்தில் சடலமாக போலீசார் மீட்கப்பட்டனர். இத்தகைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் அமெரிக்கா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது 48-வயதான ஜீசஸ் மானுவல் சல்காடோ என்பவரை போலீசார் கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக கடத்தி கொலை செய்யப்பட்டாரா? பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் காப்பகம் மூடல் – அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி பேட்டி!!

மேலும், இந்திய குடும்பத்தை கடத்தி கொலை செய்த சம்பவம் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment