கடனை திருப்பிக் கேட்டது குத்தமா? தோழியையே குடும்பத்தோடு சேர்ந்து கொலை!!!

தற்போது கடன் கொடுப்பவர்கள்,கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.  இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாகவும் நிலவுகிறது. அந்த பிரச்சனை ஒரு சில நேரத்தில் தற்கொலை அல்லது கொலைக்கு கொண்டு செல்கிறது.கொலை

அதன் வரிசையில் கடனை திருப்பி கேட்ட பெண்ணை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மானம்பாடியில் கடன் கொடுத்துள்ளார் அனிதா.

அனிதா கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் அவரை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்துள்ளனர். அனிதாவை கொன்ற அவரது நண்பர் கார்த்திக், கார்த்திக்கின் மனைவி சத்யா, கார்த்திக்கின் தந்தை பொன்னுசாமி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கஷ்டத்தில் இருந்த கார்த்திக்கிற்கு அனிதா 25,000 ரூபாய் மற்றும் 4 சவரன் நகையை கடன் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொடுத்த பணத்தையும், நகையையும் திருப்பி கேட்ட நண்பர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் கொன்றதோடு மட்டுமில்லாமல் புதைத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

கடன் கொடுத்த தோழியையே குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்துள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print