கடைக்கு முன் சிறுநீர் கழித்ததால் நிகழ்ந்த கொலை! வளையல்காரருக்கு வலை!

சிறிய பிரச்சினை என்றாலும் கூட அவை கொலைக்கு முடிந்துவிடுகிறது. இவை ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.அதன்படி சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் வளையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார் சுப்பிரமணி.

அவரின் வளையல் கடைக்கு அருகே மற்றுமொரு வளையல் கடை நடத்தி வருகிறார் சந்தோஷ் கதிர்வேலன். இந்த நிலையில் சந்தோஷ் கதிர்வேலன் கடை முன்பு சிறுநீர் கழித்ததால் கொலை நிகழ்ந்துள்ளது.

அதன்படி இந்த சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு இருவரும் ஒன்றாக கடை எடுத்து வைக்கும் போது சுப்பிரமணி ,சந்தோஷ் கதிர்வேலன் கடைக்கு முன்பாக சிறுநீர் கழித்துள்ளார். சந்தோஷ் கதிர்வேலன் மற்றும் அவரது தாயார் சுகுணா இதனைக் கேட்ட போது இருவருக்கும் இடையே வாய் தகராறு நிகழ்ந்தது.

அதோடு மட்டுமில்லாமல் சுப்பிரமணி சுகுணாவை திட்ட ஆத்திரமடைந்த சந்தோஷ் கதிர்வேலன் சுப்பிரமணியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதனால் கதறியபடி அங்குள்ள காவல் நிலையத்திற்கு ஓடினார் சுப்பிரமணி.

அங்கு சந்தோஷ் கதிர்வேலன் மீது குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார் சுப்பிரமணி.

ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷ் கதிர்வேலன் மற்றும் அவரது தாயார் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் ஓமலூர் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment