கொலை வழக்கில் பொய் சாட்சி: வசமாக சிக்கிய டி.எஸ்.பி, வி.ஏ.ஓ… தட்டி தூக்கிய நீதிமன்றம்!

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அப்போனியராஜ் என்பர் தன்னுடைய மனைவி மோட்சா ஆனந்த் மேரியை குடிபோதையில் சுவற்றில் மோதி, வயிற்றில் தாக்கி கொலை செய்ததாக சென்னை கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு நடைப்பெற்ற வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்தது. அப்போது ஆனந்த் மேரியை கொலை செய்ய எந்த ஒரு ஆயுதங்களையும் பயன்படுத்தவில்லை என்றும் குடிபோதையில் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பயங்கரம்.. ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்!!

அதே போல் சம்பவம் திட்டமிட்ட கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அப்போனியன்ராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்நிலையில் வழக்கை பொறுத்த வரையில் நெற்குற்றம் கிராம நிர்வாக அலுவலர் ஜனார்த்தன் காவல்நிலையத்தில் வைத்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

இருப்பினும், தனது அலுவலகத்தில் வாக்குமூலம் பெற்றதாக அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இதனால் பொய்சாட்சியம் தயாரித்தால் வழக்கை புலன் விசாரணை செய்ய அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அழகு, மதுரவாயல் கிராம நிர்வாக அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.