உடலுறவில் ஈடுபடும்போது பசையை ஊற்றி கொலை: ராஜஸ்தானில் பயங்கரம்!!

ராஜஸ்தான் மாநிலம் உதம்பூர் அருகே கடந்த 18ஆம் தேதி ராகுல் மீனா (வயது 30) மற்றும் சோனு குன்பர் (வயது 28) என்பவர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களது மரணம் குறித்து போலீசார் மந்திரவாதி ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது சோனு உடன் தொடர்பில் இருந்த ராகுல் தன் மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவரின் இத்தகைய செயலால் அதிர்ச்சியடைந்த மனைவி மந்திரவாதி பாலேஷ் குமாரை அணுகியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் புதிய கருத்து!!

இந்நிலையில் ராகுல் மற்றும் சோனுக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி வனப்பகுதி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். இதில் நீங்கள் வாழ்வில் ஒன்று சேர வேண்டுமானால் இருவரும் தனது கண் முன்பு உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்போது சில சடங்குகள் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் அவர்கள் மீது 50க்கும் மேற்பட்ட சூப்பர் க்ளூ(ஃபெவிகுயிக் – பிராண்ட் பெயர் மட்டுமே) டியூப்களை வாங்கி அவர்கள் மீது ஊற்றியுள்ளார். இதில் நகர முயன்ற போது தசைகள் தோல் அப்படியே பிய்த்துக்கொண்டு வந்தது.

581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?- உ.பி நீதிமன்றத்தில் பரபரப்பு!!

பின்னர் ராகுலின் கழுத்தை அறுத்து, சோனுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மந்திரவாதி பாலேஷ். அதே சமயம் கொலை செய்யப்பட்ட சோனுவிடன் பாலேஷ் அடிக்கடி மொபைல் போனில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக முக்கோண காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.