Entertainment
பொன்னம்பலத்தை ரவுண்டு கட்டிய பிக்பாஸ் பெண்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒருவருடன் மற்றவர்கள் வம்புக்கிழுத்து வந்தாலும் நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் ஆகியும் இன்னும் சுவாரஸ்யம் ஆகவில்லை.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் பொன்னம்பலத்துடன் மோத தயாராகி வருகின்றனர்.
நேற்று பொன்னம்பலம் கூறிய ஒரு ஜோக் தான் இன்றைய சர்ச்சைக்கு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்ப்பக்கப்படுகிறது. மும்தாஜூக்காக தாஜ்மஹால் கட்டலாம், தாஜ்மகாலுக்காக மும்தாஜை கட்ட முடியுமா? என்று பொன்னம்பலம் கூறிய ஜோக்கை சீரியஸாக எடுத்து கொண்டு மும்தாஜிடம் பொன்னம்பலம் குறித்து மற்ற பெண் போட்டியாளர்கள் பற்ற வைக்கின்றனர்.
இதனையடுத்து ஆத்திரமான மும்தாஜ் பொன்னம்பலத்தை நோக்கி செல்வது போல் இந்த புரமோ வீடியோ முடிவடைந்துள்ளது. இருப்பினும் புரமோ வீடியோவில் உள்ளது போல் நிகழ்ச்சி இல்லாமல் மொக்கையாக முடியும் என்பதே இதற்கு முன் நமக்கு கிடைத்த அனுபவம் என்பதால் என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
