Connect with us

மும்தாஜ்-மகத் திடீர் மோதல்: யாஷிகா காரணமா?

Entertainment

மும்தாஜ்-மகத் திடீர் மோதல்: யாஷிகா காரணமா?

52a2fa84e84c57f3f60450b14b1ffa0b

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட எல்லோருமே போலியாக நடித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது. இதனை கமல்ஹாசனும் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டார். குறிப்பாக மகத் கொஞ்சம் ஓவராக ஆட்டம் போடுவதாகவும், பெண் போட்டியாளர்களிடம் அவர் கொஞ்சம் அதிகமாகவே நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த டாஸ்க்கின்படி கொடுக்கப்பட்ட இரண்டு கேன்களில் உள்ள தண்ணீர் வெளியேறாமல் இரு அணியினர் பார்த்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் மகத் தனது கையை வைத்து தண்ணீரை மூடி கொண்டிருக்கும் நிலையில் கையை எடுக்கும்படி யாஷிகா கூறுகிறார். நான் கையை எடுத்துவிடுகிரேன் ஆனால் நீ ஒரு கிஸ் கொடுக்க வேண்டும் என்று மகத் நிபந்தனை வைக்க இதனை அருகில் இருந்து கேட்ட மும்தாஜ் கடுப்பாகி மகத்தை திட்டுகிறார். இதற்கு மகத்தும் எதிர்த்து பேச இருவருக்கும் இடையே மோதல் ஆரம்பிக்கின்றது. இந்த மோதலுக்கு யாஷிகாவின் சேட்டைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

e8aed66787707198074dff03f81da1ac-1இந்த புரமோ வீடியோ விறுவிறுப்பாக இருந்தாலும் வழக்கம்போல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது மொக்கையாகி வருகிறது. எனவே இன்றைய நிகழ்ச்சியில் இந்த சண்டை எந்த அளவுக்கு வீரியமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top