Entertainment
மும்தாஜ் பிடிவாதத்தால் பிக்பாஸ் வீட்டில் குழப்பம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது நாளான நேற்று போட்டியாளர்களுக்கு எஜமானர்-வேலைக்காரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. முந்தைய டாஸ்க்கில் ஆண்கள் அணி வெற்றி பெற்றதால் இந்த டாஸ்க்கில் ஆண்கள் எஜமானவர்களாகவும், பெண்கள் வேலைக்காரிகளாகவும் நடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
வீட்டின் தலைவி நித்யா, ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா, ஜனனி ஐயர் உள்பட அனைவரும் வேலைக்காரி டாஸ்க்கை விருப்பம் இல்லாவிட்டாலும் டாஸ்க் என நினைத்து செய்து வரும் நிலையில் மும்தாஜ் மற்றும் மமதி ஆகிய இரண்டு பேர் மட்டும் ஒருசில வேலைகளை செய்ய முடியாது என்று கூறுகின்றனர். குறிப்பாக மும்தாஜ் நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஷாரிக் கூற அதற்கு மும்தாஜ் முடியாது என்று கூற சண்டை வலுக்கின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் முன் தாய்-மகன் செண்டிமெண்ட்டை பிழிந்த மும்தாஜ்-ஷாரிக் இன்று சண்டை போட்டு கொள்வது மற்ற போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/jKjsAkyE2t
— Vijay Television (@vijaytelevision) June 27, 2018
