News
பாதாள சாக்கடை அருகில் 7 மணி நேரம் நின்ற பெண்: குவியும் பாராட்டுக்கள்
மும்பையில் பாதாளச் சாக்கடை அருகில் நின்று 7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சாலை முழுவதும் வெள்ளநீர் தேங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது
இந்த நிலையில் மும்பையில் உள்ள மாதுங்கா என்ற பகுதியில் பாதாள சாக்கடை ஒன்று திறந்து இருந்தது. அந்த பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் சென்று கொண்டிருந்ததால் பாதாளச் சாக்கடையில் வாகனங்கள் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் 50 வயது பெண் ஒருவர் அந்த பாதாள சாக்கடை அருகில் நின்று கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

தனது உயிரை துச்சமென கருதி அவர் சுமார் 7 மணி நேரம் ஒரே இடத்தில் நின்றதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைடுத்து மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு பாதாள சாக்கடையை சரிசெய்தனர்
தற்போது அந்த பெண் குறித்த தகவல் வெளிவந்துள்ளது அவரது பெயர் காத்தமூர்த்தி என்றும் ஏழு குழந்தைகளுக்குத் தாயானவர் என்றும், பூ வியாபாரம் விற்பனை செய்து வருவதாகவும் அவரது வீட்டில் அவர் ஒருவர் மட்டுமே வருமானம் செய்யும் நபர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது
