11 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட பங்குச்சந்தை தரகர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 வயது மகளை தூக்கில் தொங்க விட்டுவிட்டு பங்குச்சந்தை தரகர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கணேஷ் என்ற 42 வயது நபர் தனது மனைவி மற்றும் 11 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த குடும்பம் மிகவும் மகிழ்ச்சியான குடும்பம் என்றும் எப்போதும் அந்த குடும்பத்தில் புன்னகை தான் இருக்கும் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென கணேஷ் தனது 11 வயது மகளை தூக்கில் தொங்க விட்டுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவருடைய மனைவி தொலைபேசியில் தனது கணவரை தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தூக்கில் தொங்குவதற்கு முன்னாடி கடிதம் எழுதி கணேஷ் வைத்திருந்ததாகவும், அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாகவும் தெரிகிறது. தற்கொலைக்கு முந்திய நாள் கணேஷ் தனது மனைவியிடம் சண்டை போட்டிருப்பதாகவும் அவரது நடத்தை குறித்து சந்தேகம் அடைத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை எழுந்தது என்றும் அதன் ஆத்திரத்தில் அவர் செல்போனை போட்டு உடைத்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து தற்கொலை செய்து கொண்ட கணேஷின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அந்த கடிதத்தில் தனக்கு பிறகு தனது மகள் தனது மனைவியிடம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மகளை கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 11 வயது மகளை பங்குச்சந்தை தரகர் ஒருவர் தூக்கில் தொங்க விட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.