ஒரு அழகி ஒரு இரவுக்கு ரூ.80,000 என விபச்சாரத்திற்கு பேரம் பேசிய பிரபல நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல போஜ்புரி நடிகை அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக தகவல் வெளியானது. சுமன் குமாரி என்ற நடிகை ஒரு சில போஜ்புரி படங்களில் நடித்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை சுமன் குமாரி அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக செய்திகள் வெளியான நிலையில் அவரை பொறிவைத்து பிடிக்க போலீசார் வாடிக்கையாளர் போல் வேடமிட்டு அவரை அணுகினார். உண்மையான வாடிக்கையாளர்கள் தான் என்று நினைத்த சுமன் குமாரி அவர்களிடம் பேரம் பேசி உள்ளார்.
ஒரு அழகிக்கு, ஒரு இரவுக்கு ரூ.50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை அவர் வாங்குவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து வாடிக்கையாளர்கள் இந்த போலீஸ்காரர்கள் அந்த தொகையை கொடுத்த பிறகு அவர் காரில் அழைத்துச் சென்று அழகிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து மறைந்திருந்த மற்ற காவல் துறையினர் சுற்றி வளைத்து நடிகை சுமன் குமாரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது பல அழகிகளை வைத்து அவர் விபச்சாரம் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மூன்று அழகிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்ற அழகிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
24 வயதான சுமன் குமாரி பல பிரபலங்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் அழகிகளை அனுப்பி விபச்சாரம் செய்துள்ளதாகவும், சில வாடிக்கையாளர்களுக்கு அவரே உல்லாசமாக இருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் இதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் அவர் சம்பாதித்ததாகவும் தெரிகிறது.
மேலும் சுமன் குமாரி எதற்காகவே பல புரோக்கர்களை இதற்காக வைத்திருப்பதாகவும் அவர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக சுமன் குமாரி மும்பையில் வாழ்ந்து வரும் நிலையில் திரைப்படங்களில் நடிப்பதை பகுதி நேர தொழிலாக வைத்து விபச்சாரம் செய்வதையே முழு நேர தொழிலாக வைத்துள்ளார் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.