மனைவியின் உறவினர் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது கிழவன்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.

மனைவியின் உறவினரான 14 வயது சிறுமியை 60 வயது கிழவன் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய வழக்கு நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் மனைவியின் உறவினர் பெண்ணான 14 வயது சிறுமி அவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் 60 வயதில் நபர் அந்த சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து 14 வயது சிறுமி கர்ப்பமானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் 60 வயது நபர் மீது புகார் அளித்த நிலையில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் குற்றவாளி இல்லை என 60 வயது நபர் வாதிட்ட நிலையில் சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தை அவருடைய தான் என டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. ஏற்கனவே அவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருவதால் ஏழு வருடங்கள் தண்டனை அனுபவித்த நிலையில் மீதி 3 வருடம் அவர் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் குற்றவாளிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேத்தி வயது உள்ள 14 வயது சிறுமியை அவருடைய உறவினர்கள் பாதுகாத்துக் கொள்ளுமாறு ஒப்படைத்து இருந்த நிலையில் வேலியே பயிரை மேய்ந்தது போல் அந்த சிறுமியை 60 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.