Connect with us

தானேவைஅடுத்து இந்த மாநிலத்திலும் 144 தடை அமல்!!

ஊரடங்கு

செய்திகள்

தானேவைஅடுத்து இந்த மாநிலத்திலும் 144 தடை அமல்!!

கடந்த சில நாட்களாகவே அரசியல் கட்சிகளிடம் பல குழப்பங்கள் நிலவி வருவதால் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாக அமைந்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சின் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க துணை சபாநாயகர் அதிரான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க சதி வேலை நடந்துகொண்டு இருப்பதாக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க அம்மாநிலத்தில் இருக்கும் தானே மாவட்டத்தில்  இன்று முதல் ஜூலை-10 வரையில் 144 தடை அமலுக்கு கொண்டு வருவதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் இதன் எதிரொலியாக மும்பையில் இன்று முதல் ஜூலை-10 வரையில் 144 தடை அமல்படுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top