பழிக்குப்பழி வாங்குமா மும்பை? பந்துவீச்சை தேர்வு செய்த ரோஹித்..!!

இன்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மிகவும் சுவாரசியமான நாளாக காணப்படுகிறது. ஏனெனில்  இன்று 5 முறை சாம்பியனும் 4 முறை சாம்பியனும் களத்தில் சந்திக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து போட்டியிடுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை இந்த இரண்டு அணிகள் அந்த அளவில் சரியாக தங்களது திறமையை காட்டவில்லை என்றே கூறலாம். மேலும் நடப்பாண்டில் சென்னை அணி மும்பையை வீழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சென்னையை பழிவாங்குமா அல்லது சென்னை மீண்டும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்போடு ஆட்டம் தொடங்கியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.