பாண்டியா தான் இல்ல நீயாவது இருப்பா….. கடும் போட்டியின் நடுவில் இஷான் கிஷனை தக்கவைத்தது மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மேட்ச் பற்றித்தான். சென்னைக்கும், மும்பைக்கும் இடையே ஒவ்வொரு போட்டியும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி போல காணப்படும்.

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வலிமையான அணி என்றால் அதனை மும்பை இந்தியன்ஸ் என்றே கூறலாம். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள அனைத்து வீரர்கள் வேறு அணிக்கு விற்கப்பட்டதாக காணப்படுகிறது.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் பாண்டியா சகோதரர்கள் இந்த முறை புதிதாக வந்துள்ள அணிகளில் இணைந்துள்ளனர். இவ்வாறு வரிசையாக மும்பை கோட்டை தகர்ந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ்ன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இஷான் கிசன் ஏலத்திற்கு வந்தார். இஷான் கிசனையாவது அணியில் தக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதி தீவிரம் காட்டியது.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் இஷான் கிசனை ரூபாய் 15.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடும் போட்டிக்கு இடையே மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிசனை ஏலத்தில் எடுத்து தக்கவைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.