ரோஹித் சர்மா சீக்கிரம் அவுட்டானால் மும்பை ஜெயிக்குமா? நேற்றைய போட்டியிலும் அதுதான் நடந்தது..!

ரோகித் சர்மா சீக்கிரமாக அவுட் ஆனால் மும்பை அணி ஜெயிக்கும் என்ற சென்டிமென்ட் நேற்றைய போட்டியிலும் தொடர்ந்து உள்ளது.

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி கொடுத்த 215 என்ற இலக்கை 18.5 ஓவர்களில் மும்பை எட்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரின் மூன்றாவது பந்ததில் அவுட் ஆனார் என்பதும் அவர் ரன் ஏதும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரின் அபார பேட்டிங் காரணமாக நேற்றைய போட்டியில் மும்பை அணி ஜெயித்தது. இதற்கு முந்தைய போட்டியிலும் ரோகித் சர்மா முதல் ஓவரில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த போட்டியிலும் மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 213 என்ற இலக்கை நோக்கி மும்பை விளையாடிய நிலையில் ரோகித் சர்மா இரண்டாவது ஓவரிலேயே மூன்று ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் அன்றைய போட்டியிலும் மும்பை அணி ஜெயித்தது.

இதனால் மும்பை அணி ஜெயிக்க வேண்டும் என்றால் ரோகித் சர்மா சீக்கிரம் அவுட் ஆக வேண்டுமா என்ற சென்டிமென்ட் குறித்து நெட் காமெடியாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் ரன் அடிக்கவில்லை என்றாலும் மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தினார் என்பதும் அவர் எடுத்த மிகச் சரியான ஒரு சில முடிவுகள் தான் அணியின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.