ஒரே ஒரு வெற்றி.. 8ல் இருந்து 3வது இடம்.. மும்பை அணி அசத்தல்..!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 54ஆவது போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டி பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றதை எடுத்து பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் டூபிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் ஆறு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.

mi vs rcb2இதனை அடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய நிலையில் வழக்கம்போல் ரோகித் சர்மா சொதப்பினார் என்பது அவர் ஏழு ரன்களில் அவுட் ஆகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சூரியகுமார் யாதவ், வதேரா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். இதனை அடுத்து மும்பை அணி 16.3 அவர்களின் 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருந்த மும்பை அணி தற்போது 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பதும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தோல்வி அடைந்த பெங்களூர் அணி 10 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் போட்டிகள் தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என்றாலும் இப்போதைக்கு முதல் நான்கு இடங்களில் குஜராத், சென்னை, மும்பை மற்றும் லக்னோ அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குஜராத் தவிர வேறு எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு உறுதியாக செல்லும் என்று கூற முடியாத நிலைதான் தற்போது புள்ளி பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.