இளைஞர்களே உஷார்! டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் பல கோடி மோசடி; ஒருவர் கைது!

தமிழகத்தில் தினந்தோறும் கொள்ளை மோசடி இவ்வாறு பல சம்பவங்கள் நடந்து கொண்டே வருகிறது. இந்த சம்பவத்தை நவீன முறையில் பலரும் கையாளுகின்றனர். அதிலும் குறிப்பாக படித்த இளைஞர்கள் கூட மோசடி செயலில் ஈடுபடுவது அவ்வப்போது கண்டறியப்படுகிறது.

 டிஜிட்டல் மார்க்கெட்டிங்

அவர்கள் தங்கள் படிப்பின் அறிவினை இதுபோன்ற மோசடி  சம்பவங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் நிறுவனம் நடத்தி பணம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் ஆன்லைன் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவு காணப்படுகிறது. இதனை இவர் தனக்கு லாபகரமாக பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் பல கோடி மோசடி செய்ததாக மெர்வின் கிரிஸ்டோபர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் திருச்சி, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் ரூபாய் 5 கோடி வரை பணத்தை கொடுத்ததாகவும் அவற்றை மோசடி செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment